புதன், 10 நவம்பர், 2021

 


என் போதையை
வெறித்து வெறித்துப் பார்க்கும்
கங்கு

தீக்குச்சி
காத்திருந்து பற்றவைக்கும்
என் மகிழ்ச்சிக்காக
தன் உடல் எரிந்து
காற்றில் நடனம் ஆடும்
கைகளைக் கூப்பி
மௌனமாய் நிற்பதைத் தவிர
என்னிடம் கைமாறு வேறில்லை...

கங்கு
உந்தன் மறுபிறப்பா...
வெறித்து வெறித்துப் பார்க்கும்
என்னுள்
ஆனந்தத் திரியைப்
பற்றவைக்கும்...

வெள்ளைப் புகைச் சூழ
கண்ணில்
பல நினைவுகள்
பூத்துக் குலுங்கும்
எல்லாப் பூக்களும்
உதிர்ந்துக் காத்திருக்கும்
என்னை வழியனுப்ப...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக