குழந்தை
குரங்கெனச் சொல்லும்
வாயில் காற்றை நிரப்பி
குரங்காக சேட்டைகள் செய்திடுவேன்...
குழந்தை
நாயெனச் சொல்லும்
சட்டென வவ்வென்று குரைத்திடுவேன்
நட்பே
நீ முட்டாள் என்றெனை நினைக்கையில்
நான் முட்டாளாய் மாறியதை
நீ அறிவாயா...
நட்பே
நீ பைத்தியம் என்றெனை அழைக்கையில்
நான் பைத்தியம் ஆனதை
நீ ரசித்தாயா...
எது எப்படியோ
அது அப்படியே எனக்குப்
பிடித்துப்போனது
அப்படித்தான் அப்படித்தான்
நான் இப்படி மாறிப்போனது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக