விவசாயிகளுக்கு லாபம்
முதலாளிகளுக்கு லாபம்
தொழிலாளிகளுக்கு லாபம்
கடவுள்களுக்கு லாபம்
லாபம் சேர்க்க
படிப்புகள்
லாபம் சேர்க்க
ஆய்வுகள்
லாபம் சேர்க்க
குழுமங்கள்
லாபம் சேர்க்க
போர்கள்
அன்பு செய்த
காலம் மாறி
லாபம் செய்யும்
காலம் ஆகிப்போனது
அன்பு காலமாகிப்போனது...
உயிர் மூச்சில்
எது லாபம்?
எது நட்டம்?
ஒருவர் லாபம்
ஒருவர் நட்டம்
சிறு தவறு
ஒருவர் லாபம்
பலர் நட்டம்
பெரிய தவறு
அரசியல் சட்ட திட்டங்கள்
எல்லோர்க்கும் சமன்
இல்லையேல் எமன்
உலகம் முழுதும்
உயிர்கள் அனைத்தும்
பகிர்ந்து வாழும் மூச்சு
இதில்
உயர்வு தாழ்வு
என்ன பேச்சு...
பகிர்ந்து வாழும்
தேனீக்கள்
பறித்து வாழும்
மனிதர்கள்
கன்று குடிக்கும் பாலை
கவர்ந்து குடிக்கும் மக்களை
நியதி மீறி
நீதி பேசும் ஆட்களை...
எண்ணி விட முடியாத
நட்சத்திரங்களை
விலை பேச
லாபம் எண்ணி எண்ணி
சேர்க்கும் நபர்களை...
இயற்கையைச் சுரண்டி
செயற்கையைச் செய்யும்
நம்மை...
லாபம்
ஓர் நாளில்
நட்டமாக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக