சனி, 24 ஜூலை, 2021

 


முதலில் போகிறவர்களை
முந்திப் போகிறவர்களை
பரிதாபமாகவும்

முதலில் வருபவர்களை
முந்தி வருபவர்களை
அபரிமிதமாகவும்

பார்த்துப் பழக ஆரம்பித்தது
எப்போது என்றே தெரியவில்லை
இதுவரையில்...

மரணமும் ஜனனமும்
உடலுக்கு ஒருமுறை
மனதிற்கு பலமுறை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக