ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

 


டாபர்மேனும் டால்மேஷனும்
வாங்கி வளர்க்கும் சமூகத்திலா
ஜாதி ஒழியப் போகிறது...


சனி, 27 பிப்ரவரி, 2021

 


தெருவில்
என்னைத் துரத்தி வரும்
இந்த தெரு நாயை
நேற்றோ முன்தினமோ
காயப்படுத்தியது யாரோ?
என்னைப்போல் இருந்தானோ?
வேகம் குறைத்து நின்றேன்
அதுவும் குரைப்பதை நிறுத்தி
வாலாட்டி நின்றது
சொல்லாமல் சொன்னது
அவன் போல்
நான் இல்லையென்று...


வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

 


காசில்லாமல் கொடுக்கும் உலகம்
காத்து இருக்கிறது
சுதந்திரம் கொண்ட குழந்தையின் கைகள்
மட்டும் பெறுகிறது
அந்த வேற்று கிரக வாசிகள்
என் வீட்டிலும் உன் வீட்டிலும்
வந்து போவதுண்டு
அந்த இரகசியங்களை
குழந்தைகள் சிரிப்பினில் மறைப்பதுண்டு...


வியாழன், 25 பிப்ரவரி, 2021

 


புரிந்துகொண்ட
உண்மைதானோ பொய்
புரிந்து கொள்ளாத
நிலைதானோ  புத்தம்...


புதன், 24 பிப்ரவரி, 2021

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

 


ஆடை இல்லாது
உச்சம் காணாது
புத்தமும் முத்தமும்...


திங்கள், 22 பிப்ரவரி, 2021

 


ஆசை வேரில்
தினம் பூக்கிறது
புத்தமும் முத்தமும்...


ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

 


குழந்தை ஆக முடிந்தால்
புத்தன் ஆகத தேவையில்லை
அத்தனைக்கும் ஆசைப்படு...


சனி, 20 பிப்ரவரி, 2021

 


ஆசைக்கு எதிராக
எண்ணங்களைப் பின்னி
சிறையாகிப் போனான் சித்தார்த்தன்

அந்தச் சிலந்தி வலை விழுதுகளில்
அவன் விழுங்க நினைக்கும் உணவுகளில்
நானும் ஒருவன்...


வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

 


வாழ்வில்
இலாபமும் இல்லை
நட்டமும் இல்லை
இலாப நட்டம்
பார்ப்பவர்களுக்கு
வாழ்க்கை இல்லை

வியாழன், 18 பிப்ரவரி, 2021

 


இலாபம் பார்க்காமல்
வாழ்வது எப்படி?
நதி சொல்கிறது
மதி கேட்கவில்லை

நாளெல்லாம் திருவிழா
இசையும் நடனமும்
இறுதிவரை

தாகத்திற்கு
தன்னைக் கொடுக்கும்
மேகத்தையும்
காகத்தையும்
பேதம் என்றும்
பார்த்ததில்லை

ஒட்டி வாழும்
மீனும்
எட்டி ஓடும்
மானும்
நட்பு மட்டுமே
யாவும்
கரங்கள் இன்றியும்
ஈனும்
கடலில் முடிந்தபோதிலும்
கர்ணனாகவே
கார்மேகம் சேரும்...

இலாபம் பார்க்காமல்
வாழ்வது எப்படி?
நதி சொல்கிறது
மதி கேட்கவில்லை...


புதன், 17 பிப்ரவரி, 2021

 


எல்லா உச்சத்திலும்
ஒரு பிரம்பு அடி
சப்தமும் சங்கீதமும் கலந்து...

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

 


இறந்தவருக்கு கேட்கிறதா...
கேள்விக் குறியாகவே இருக்கிறது
காதுகள்


திங்கள், 15 பிப்ரவரி, 2021

 


முந்திரி பழங்களைப் பறித்து
அதன் கொட்டையை உடைத்துக்
கொடுக்கும் தொழிலாளிகள்
அதை வாங்கி விற்கும்
பஜன்லால்களைப் போல் இருப்பதில்லை
இலாபம் விசித்திரமானது
மோடி வித்தைக் காட்டுகிறது...

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

 


ஒரு கையில்
மதுவும்
மறு கையில்
சிகரெட்டும்
குடிக்கவா..?  புகைக்கவா..?
எனும் பொழுதில்
படுக்க வா...
என்று உள்ளுக்குள் அழைத்தது யார்?
கண்கள்
தாழ் மூடி
உரக்கமில்லாமல்
தேடி அலைகிறது
ஜல் ஜல் ஜல்...
என்ற ஒலியைத் தொடர்ந்தவாறு...
கண்கள் திறந்து பார்க்கும் போது
குடித்துக் கொண்டும்
புகைத்துக் கொண்டும்
இருந்தது
ஒரு கருப்புப் பூனை...
வேறு யாரும் அல்ல
நானேதான்
அந்தத் திருட்டுப் பூனை
மியாவ்...


சனி, 13 பிப்ரவரி, 2021

 


சொல்லிய சிலவும்
சொல்லாத பலவும்
சேர்ந்தது கவிதை

விதை அளவு
எனது
வான் அளவு
உனது

அணுக் கருவின்
பிளவு
தொடர் வினையின்
விளைவு

உலக மகா
கனவு
அனைத்தும் உந்தன்
நினைவு...


வெள்ளி, 12 பிப்ரவரி, 2021


இரவில் ரகசியமாக
சத்தம் வராமல் பிரித்து
இதழ் பருகும் சாக்லேட்

பற்கள் படாமலே
கடித்து விடுகிறது
பாதி இரவிலே
எழுப்பி விடுகிறது

விழித்து விழித்துப் பார்க்கிறேன்
விழியில் நீயும் இல்லை
இதழில் இனிப்பும் இல்லை...


வியாழன், 11 பிப்ரவரி, 2021

 


உதடு அலைகள்
அசையாமல் காத்திருக்கும்
மனது கடல் போல்
உள்ளே ஆர்ப்பரிக்கும்...


புதன், 10 பிப்ரவரி, 2021

 


கொடுக்க நினைக்கிறேன் எவரும் வாங்கவில்லை
வாங்க நினைக்கிறேன் எவரும் கொடுக்கவில்லை
விசித்திரமானது முத்தம்...


செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

 


வண்ண மலர்களா
வண்ணத்துப் பூச்சிகளா
வகைப்படுத்த மறந்துவிட்டேன்
வஞ்சி உனை பார்த்தப் பின்னே
வண்ணங்கள் எல்லாம்
உன் எண்ணங்களாக
என்னைச் சுற்றிப் பறக்குதடி...

திங்கள், 8 பிப்ரவரி, 2021

 


விதைத்த விரல்கள் தேடி
வேரும் கிளையும்
பூவும் இலையும்...
முடிந்தவரை
முடியும் வரை
முடிவே இல்லை
தனது விதைகளை
விட்டுச் செல்லும்
விரல்களுக்காக...
விரல்களும் காத்திருக்கும்
விதைக்காக...




ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

 


கண் விழித்து
கண் மூடும்
காட்சிகளை விழுங்கும் கண்

கண் திறக்கும் போது
காணாதது எல்லாம்
கண் விழுங்கியது

பிடித்தவை எல்லாம்
காணாமல் போகிறது
களவாடும் கண்கள்
கண்ணீர் விட்டு நடிக்கிறது...


சனி, 6 பிப்ரவரி, 2021

 


நான் பார்ப்பது நிழல்
நிழல் பார்ப்பது நிஜம்
நிஜம் தெரிந்த நிழல்
என்னோடே இருந்தும்
ஏதும் சொல்வதில்லை எனக்கு...


வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

 


காதலி
பிரிவினால்
தேவதை ஆகிறாள்...

கனவுகளை
வரங்களாக
வாரி வழங்குகிறாள்...

மௌனத்தை
முத்தமாக்கி
ரகசியமாய் தருகிறாள்...

வானமாகி
தூரமானவள்
கண்களிலே கார்மேகமாகிறாள்...

கனமழை
மனதிலே
சாரல் விழும் விழியிலே...


வியாழன், 4 பிப்ரவரி, 2021

 


வானக் குடைப் பிடித்து
நாளும் கூட வரும்
நாயகியைக் காணவில்லை
நானும் தேடுவதை நிறுத்தவில்லை

என் நிழல்
உன்னைச் சேர்ந்ததைப் போல்
உணருகிறேன்
உச்சி வெயில் வேளையிலும்
அதனால் தான்
குளிருகிறேன்

உன் நிழல் கூட
முகம் காட்ட மறுப்பதேனடி
மறைந்து கொண்டு
என் மனதில் சிரிப்பதேனடி...


புதன், 3 பிப்ரவரி, 2021

 


கண் நீர் நதியில்
சுமை தாங்கிப் படகு
ஐலேசா பாடியும்
ஆகவில்லை
ஐ லேசா


செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

 


நீ வசித்த வீடு கூட
இப்போது இல்லை
இருந்தும்
அந்த நினைவிடத்தை காணாது
கண்கள் கடந்ததே இல்லை...


திங்கள், 1 பிப்ரவரி, 2021

 


இருவர் இதழ்களின்
முயற்ச்சியில் தான்
பயிற்சியில் தான்
காதல் படியேறி
உச்சம் தொடுகிறது...

படிக்கட்டுகளும் உதடுகளே
பாதச்சுவடுகளும் உதடுகளே
வான தூரம் என்றாலும்
வலி இல்லா பயணங்களே

பாதங்கள் ஏறியதும்
படிக்கட்டாய் ஏந்துகின்றன
ஏந்திய படிக்கட்டுகள்
பாதமாக மாறுகின்றன

படி தாண்டாத
பாதங்கள்
வழுக்கி விடாத
படிக்கட்டுகள்

எளிவேட்டர்
எங்களுக்குத தேவையில்லை
எளிமை போல்
சுகபோகம் ஏதுமில்லை

இருவர் இதழ்களின்
முயற்ச்சியில் தான்
பயிற்சியில் தான்
காதல் படியேறி
உச்சம் தொடுகிறது...