நூல் இழைகள்
பின்னிப் பின்னி
ஆடை
மூங்கில் இழைகள்
பின்னிப் பின்னி
கூடை
மணல் துகள்கள்
பின்னிப் பின்னி
பாலை
மலர்கள் வாசம்
பின்னிப் பின்னி
சோலை
நீர்த் துளிகள்
பின்னிப் பின்னி
நதி
எண்ண அலைகள்
பின்னிப் பின்னி
விதி
தன்னை மறைத்து
தன்னை மறைத்து
தன்னை மறைக்கிறது
இந்த வாழ்க்கை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக