தன்னம்பிக்கை என்ன பெரிய தன்னம்பிக்கை
தந்தை நம்பிக்கை இருக்கிறதே அதுதான் என் பெரும் நம்பிக்கை
தந்தை கைப்பிடித்துப் போன காலங்களில்
தந்தை கை இமையம் அளவு நம்பிக்கை
என்னைத் தூக்கிச் சுற்றும் அவர் கை
காண்பித்தது வடக்கை தெற்கை கிழக்கை மேற்கை
தோற்கையில் எல்லாம் ஜெயிக்கும் வேட்கை
ஊட்டி வளர்த்த தந்தை இருக்கும் வானத்தை
பார்க்கப் பார்க்கப் பெறுவேன் ஆசீர்வாதத்தை
நோக்க நோக்கப் பெறுவேன் பெரும் நம்பிக்கை
தன்னம்பிக்கை என்ன பெரிய தன்னம்பிக்கை
தந்தை நம்பிக்கை இருக்கிறதே அதுதான் என் பெரும் நம்பிக்கை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக