திங்கள், 30 ஜூன், 2025


இலை இல்லாத முட்செடியில்

இணை இல்லாத 

சிறு கிளியின் பிரார்த்தனை... 


காற்று

முள் கிரீடம் ஏற்று

சிலுவை தூக்கி நடக்கிறது


இலையும் பூவும் கனியும்

உயிர்த்தெழுந்து

தூரத்தில் இணையும் வருகிறது


பிரார்த்தனை பலித்தது

காற்று குளிர்ந்தது

இமைகள் மெல்லத் திறந்தது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக