சனி, 21 ஜூன், 2025


எனக்கு மட்டும் 

கேட்கும் உன் குரல்

எனக்கு மட்டும்

ஜில்லிடும் உன் நிழல்

எனக்கு மட்டும் 

தெரியும் உன்னை

உனக்கும் தெரிந்திருக்கும்

என்பதென் நம்பிக்கை

உன் புன்னகை தான்

அதை எனக்குத் தந்தது

அந்த நம்பிக்கை பொய்யெனில்

உனக்கு எப்படி

உன்னை அறிமுகம் செய்வது... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக