பழக பயந்து
புறக்கணிக்கிறேன்
பழுதான மனதின்
உடனிருக்கிறேன்
அறியக் கூட
தயங்கி நிற்கிறேன்
அறியாமையோடு
கலந்திருக்கிறேன்
மனிதப்பிறவி தான்
மறுதலிக்கிறேன்
மனிதாபிமானமின்றி
எதுவாக இருக்கிறேன்...
இரண்டு காலில்
நடக்கிறேன்
இருந்தும் மனிதனாக
மறுக்கிறேன்
மூன்றாம் பால் உன்னை
முற்றிலும் வெறுக்கிறேன்
முப்பால் படித்தும்
முட்டாளாக இருக்கிறேன்
மன்னிப்பால் என்னை
மனிதனாக்கு
அன்னைப்பால்
அருந்திய நம்மை
அன்பால் சமமாக்கு
புறக்கணிக்கிறேன்
பழுதான மனதின்
உடனிருக்கிறேன்
அறியக் கூட
தயங்கி நிற்கிறேன்
அறியாமையோடு
கலந்திருக்கிறேன்
மனிதப்பிறவி தான்
மறுதலிக்கிறேன்
மனிதாபிமானமின்றி
எதுவாக இருக்கிறேன்...
இரண்டு காலில்
நடக்கிறேன்
இருந்தும் மனிதனாக
மறுக்கிறேன்
மூன்றாம் பால் உன்னை
முற்றிலும் வெறுக்கிறேன்
முப்பால் படித்தும்
முட்டாளாக இருக்கிறேன்
மன்னிப்பால் என்னை
மனிதனாக்கு
அன்னைப்பால்
அருந்திய நம்மை
அன்பால் சமமாக்கு
சகோதரத்துவமாக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக