வெள்ளி, 2 அக்டோபர், 2020

காந்தி

 


வெளி நாட்டிலிருந்து வந்த ஏமாளி
உள் நாட்டினில்
நடந்தே சுற்றிய கோமாளி
அவர் சிலைகளை எல்லாம்
உடைத்து விடுங்கள்
நாடெங்கும் அரை ஆடையுடன்
நிற்கிறது
உங்கள் விலை ஆடைகளை
தந்தாலும்
பாவம்  பறவைகளுக்கும் 
தெரியப் போவதில்லை
அவர் மகாத்மா என்று...

காந்தியை மறந்துவிட்டார்கள்
இந்தியை இந்தியா எங்கும்
விதைக்கிறார்கள்

கிராமங்களை நகரமாக்க
பாடாய்ப் படுகிறார்கள்
இவர் சாயம் அழியவில்லை
விவசாயம் அழிகிறது

மோடிக்கு நிறக் குருடோ
கறுப்பை அழிக்க வந்தவர்
பச்சையை எல்லாம் அழிக்கிறார்

இந்த சிலைகளையும்
சேர்த்து அழியுங்கள் 
மிச்சமும் மீதியுமாக
இந்த மனசாட்சி மட்டும் எதற்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக