புதன், 4 நவம்பர், 2020

 


உடைந்து விழுந்த கிளைக்கு
ஆறுதல் சொல்லிச் சென்றது பறவை
கிளை மெல்லத் துளிர்த்துக் காத்திருக்கும்
காற்றுக் கடிதம் எழுதி அனுப்பிவைக்கும்
பழங்கள் கூட சமைத்து வைக்கும்
நான்கு திசையிலும் பார்த்து நிற்கும்
இலைகளை சிறகைப் போல 
உன் நினைவாய் அசைத்துப் பார்க்கும்...
அடிக்கடி அவ்விடம் நானும் செல்வதுண்டு
கிளைகளும் அந்த ஆறுதலை
எனக்குச் சொல்வதுண்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக