மேலே உயர்த்திக் கொடுத்தும்
கீழே மறைத்துக் கொடுத்தும்
பிழைக்கின்ற சமூகம்
பிழை திருத்தி
தலை உயர்த்தி
வாழ்வதெப்போது...
கான்வென்ட்டில் உயர்த்திக் கொடுத்து
ட்ரீட்மென்ட்டில் உயர்த்திக் கொடுத்து
டாஸ்மாக்கில் உயர்த்திக் கொடுத்து
குடிதண்ணீருக்கே உயர்த்திக் கொடுத்து
கவர்மெண்டுக்கு மறைத்துக் கொடுத்து
காண்ட்ராக்டுக்கு மறைத்துக் கொடுத்து
டிராஃபிக்கில் மறைத்துக் கொடுத்து
நீதிக்கே மறைத்துக் கொடுத்து
சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை
போக்குவரத்தும் சரியில்லை
குற்றம் மட்டுமே நிறைவாய் இருக்கிறது
நீதி கொஞ்சமும் இல்லை
மேலே உயர்த்திக் கொடுத்தும்
கீழே மறைத்துக் கொடுத்தும்
பிழைக்கின்ற சமூகம்
பிழை திருத்தி
தலை உயர்த்தி
வாழ்வதெப்போது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக