ஞாயிறு, 28 மே, 2023


ஸ்டெதாஸ்கோப் கேட்பதெல்லாம்
கண் தெரியாதவரின் கைத்தடிச் சத்தம்...
இதய இசையை
இதயம் மட்டுமே கேட்கும்...


சனி, 27 மே, 2023


மேலே உயர்த்திக் கொடுத்தும்
கீழே மறைத்துக் கொடுத்தும்
பிழைக்கின்ற சமூகம்

பிழை திருத்தி
தலை உயர்த்தி
வாழ்வதெப்போது...

கான்வென்ட்டில் உயர்த்திக் கொடுத்து
ட்ரீட்மென்ட்டில் உயர்த்திக் கொடுத்து
டாஸ்மாக்கில் உயர்த்திக் கொடுத்து
குடிதண்ணீருக்கே உயர்த்திக் கொடுத்து

கவர்மெண்டுக்கு மறைத்துக் கொடுத்து
காண்ட்ராக்டுக்கு மறைத்துக் கொடுத்து
டிராஃபிக்கில் மறைத்துக் கொடுத்து
நீதிக்கே மறைத்துக் கொடுத்து

சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை
போக்குவரத்தும் சரியில்லை
குற்றம் மட்டுமே நிறைவாய் இருக்கிறது
நீதி கொஞ்சமும் இல்லை

மேலே உயர்த்திக் கொடுத்தும்
கீழே மறைத்துக் கொடுத்தும்
பிழைக்கின்ற சமூகம்

பிழை திருத்தி
தலை உயர்த்தி
வாழ்வதெப்போது...


லிட்டில் விங்ஸ் குறும்படம்


















லிட்டில் விக்ஸ் குறும்படம் இன்று திரையிடப்பட்டது. நல்ல குறும்படம். திரைக் குழுவினர்கள் அணைவரும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை நல்கி இருந்தார்கள். அவர்கள் மென்மேலும் உச்சம் தொட வாழ்த்துகள்.


மேலும் எனது பார்வையில் லிட்டில் விங்ஸ்:


"Little Wings"


சின்னசாமி சிறுவர்களுக்கு

சேவல் பிடித்துத் தருகிறார்

பெரியசாமி இடையறாது

சேவல் படையல் கேட்டுத் தவிக்கிறார்

சேய் இல்லாத அம்மாசாமி

முட்டை உடைந்து அழுகிறார்

கண்ணுக்குத் தெரியாத சாமி

காவல் காத்ததா?

அம்மாசாமியின் சேலை

காவு வாங்கியதா?

சாமி

கேள்விகளுக்கு பதில் தராமல்

எல்லோருக்கும் சிறு சிறகு தருகிறது

சிலர் சிறகை முறிக்கிறார்கள்

சிலர் சிறகை வளர்க்கிறார்கள்...


வெள்ளி, 26 மே, 2023


ஆனந்தம்
உணரும் போதெல்லாம்
ஒரு மாய முலை அதைப் புகட்டும்...

கண்ணீர் வரும்முன்
செந்நீர் நிறம் மாறிப் பாயும்
தாய் முலையின் ஆதி மாய முலை...

அன்னைக்கும்
அது ஆனந்தம் புகட்டும்
சேயோடும் சேர்ந்து சிரிக்கும்...


புதன், 24 மே, 2023


துளியில் துளி அமரும் கடல்
கதிரில் கதிர் அமரும் வயல்
கடலலை போல் வயலலை
இதயம் தொடுகிறது பேரலை...


செவ்வாய், 23 மே, 2023


கைப்பேசி வரும் முன்பே
கடல் பேசி
நான் கேட்ட சங்கு...


திங்கள், 22 மே, 2023


பூவும் மலர்ந்து
நிலவும் மலர்ந்து
நினைவும் மலர்கிறது...


ஞாயிறு, 21 மே, 2023


ஒவ்வொரு மணித் துளியும்
உடைத்து விளையாடத் தான்
நீர்க்குமிழ்த் தொட்டு குழந்தைச் சொல்லித் தருகிறது...


சனி, 20 மே, 2023


நிழல் வாசிக்கும்
நிஜம் சிலிர்க்கும்
மௌனப் பேரிசைக்கு
இதயம் பின்னணி இசைக்கும்...


வெள்ளி, 19 மே, 2023


எங்கோ தெரியும் புள்ளி வானமும்
என்னில் விழும் இம்மி நிழலும்
உயிரை வளர்த்தெடுக்கும்...


வியாழன், 18 மே, 2023


ஒளி நிறையும்
இருள் நிறையும்
இடையிடையே போய் வரும்
இடம் எதுவோ?
ஓர் நாள் வரும்
நானங்கு போய் நிறையும்
நாளினில் தான் புரியும்
அதுவரை தொடரும்
ஒளி நிறையும்
இருள் நிறையும்
இடையிடையே போய் வரும்...


செவ்வாய், 16 மே, 2023


"நண்பன் ஜான்சன் இன்று காலமானான்"

இறுதிச் சடங்கு நடைபெறும் இடம்:
Plot no 9, Gayathri Nagar main Rd,
sembakkam, Chennai - 600064

நினைவில் வந்தமர்ந்து
நெடுந்தூரம் போய் மறையும்
மாயப் பயணம் இந்த மரணம்...

ஒரு ஓவருக்கு பத்துப் பதினைந்து அகலப் பந்து வீசி விளையாடுவாய் நண்பா
வாழ்க்கையை மட்டும் ஏன் சீக்கிரமாய் முடித்துக் கொண்டாய்...
எல்லாமே உனக்கு விளையாட்டு தான்
இறைவனுக்கு தான் உன்னைப்போல் விளையாடத் தெரியவில்லை
சிரித்த முகத்துடனே இரு
சீக்கிரமே வருவோம் நாங்கள்
கமாய் கிரிக்கெட் குழு மற்றும் நகர் நண்பர்கள்



உலகே பணத்தை வளர்த்துக் கொண்டிருந்தபோது
தனக்கு சிறகை வளர்த்துக் கொண்டிருந்தாள்
ஒருத்தி...


ஞாயிறு, 14 மே, 2023


பறக்கும் முட்டையிலிருந்து
உடைத்து வெளிவரும் பறவைகள்
பார்வையில் கூட சிறைபடுவதில்லை...


சனி, 13 மே, 2023


பொம்மைக் கடவுள் விற்கும்
உண்மைக் கடவுள்
அம்மா...

மாய வடம் பிடித்து
தெருத்தெருவாய் ‌
கூடைத் தேர் இழுக்கிறாள்

சாயங்காலம் வந்து
சூரியனை இறக்கி வைக்கிறாள்
கூடையில் கவிழ்த்து வைக்கிறாள்

தன்னை மறந்தவள்
என்னை பார்த்துக்கொண்டே
நிலவாய் கண் விழிக்கிறாள்

பொம்மைக் கடவுள் விற்கும்
உண்மைக் கடவுள்
அம்மா...


வெள்ளி, 12 மே, 2023


கடவுள் கைவிட்டாரென்று மருத்துவரிடம்
மருத்துவம் கைவிட்டதென்று கடவுளிடம்
இங்கங்கென்று நில்லாமல் அல்லாடும்
நிலையுணர்ந்து தனக்குள்ளே  தங்கிவிட்டால்
தானாக நின்றுவிடும் நடமாட்டம்
தன்னுள்ளே நுழைவதுவே கொண்டாட்டம்...


புதன், 10 மே, 2023


வானம் கேட்கும் பறவையிடம்
உன் வார்த்தை சொல்லி பழக்குகிறாய்
நீ சொல்லித் தந்த வார்த்தை சொல்லி
பறவை
வானம் தான் கேட்கிறது
வேறு வேறு வார்த்தைகளை
நீ சொல்லிச் சொல்லிக் கொடுக்கிறாய்
அத்தனை வார்த்தைகளிலும்
பறவை
வானம் தான் கேட்கிறது...


செவ்வாய், 9 மே, 2023


பார்க்கும் முன்பே கூப்பிட்டேன்
இடர் வரின் யாசித்தேன்
யாரும் சொல்லித் தராத சொல்
அம்மா...

திங்கள், 8 மே, 2023


'தாடண்டர்நகர் மணி டெய்லர் இன்று காலமானார்'

எத்தனை வயதானால் தான் என்ன
அரைக் கால் பேண்ட் சட்டை
அணிந்து நிற்கும் சிறுவனாகவே
மணி டெய்லர் இறந்த செய்தியை
காதில் கேட்கிறேன்...

பின் மண்டையை சொறிந்து கொண்டே
கனிந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே
நாளை என்று சொல்லி இருப்பார்
வானம் ஏறிச் செல்லும் முன்னே
அவர் காலனிடத்தும் காலம் கேட்டிருப்பார்...


திங்கள், 1 மே, 2023


உன்னிடம் சொல்ல...
ஆயிரம் வார்த்தைகளை எடுத்து வந்தேன்
ஆயினும் உன் பெயரைக் கூட
சொல்ல முடியாமல் தயங்கி நின்றேன்

விலகிச் செல்லாமல் நீயும்
தயங்கித் தயங்கி நானும்
நின்றபோது
நீ கொண்டுவந்த வார்த்தைகளை
நான் படித்தேன்

நான் கொண்டு வந்ததும்
நீ கொண்டு வந்ததும்
மட்டுமல்ல
காதல் கொண்டு
யார் கொண்டு வருவதும்
இந்த ஆயிரம் வார்த்தைகள் தான்...

இந்த ஆயிரம் வார்த்தைகள்
ஒரு சேர மலர்ந்தால்
ரோஜா...

இந்த ஆயிரம் வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் உதிர்ந்தால்
கண்ணீர்...

ஆயிரத்தில் ஒரு வார்த்தை
உதிராத உயிர் வார்த்தை
உன் பெயர்...

உன் பெயரை
திரும்பத் திரும்ப உள்ளே விதைத்து
ஆயிரம் வார்த்தையை வளர்க்கப் பார்க்கிறேன்

உன்னிடம் சொல்ல...