வியாழன், 3 மார்ச், 2016

வளர்ச்சி

முன் இரு கால்களும்
கைகலாய் மாறியது
நாகரிகத்தின் துவக்கம்

கண் பார்த்து
நாசி நுகர்ந்து
நாவால் ருசித்ததுவும் வளர்ச்சி

சுற்றும் அறிந்து
சுற்றம் பகிர்ந்து
கூடி வாழ்ந்ததுவும் வளர்ச்சி

கண்கள் மூடி
கால்கள் இன்றி
மனதின் பயணம்
கண்ட மெய் ஞானமும் வளர்ச்சி

இவையாவும் அறிவின் முதிர்ச்சி

பின்னர் வந்தது விஞ்ஞானம்
வளரத் தொடங்கியது வியாபாரம்

செல்வந்தர்களை
செயற்கை ஒளி பிரகாசித்தது
வானூர்தி வான்வழி சேர்த்தது
இதன் உச்சம்
நிலா சோறு சாப்பிட்டவர்கள்
நிலாவில் சாப்பிட விரைகின்றனர்

இல்லாதவர்களைப்பற்றி பேச
நானென்ன அரசியல் வாதியா
என் வியாபாரம் அதுவல்ல...

என் வியாபாரம்
எண் வளர்ச்சி
சுயம் மறப்போம்
சுயநலம் காப்போம்.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

கனவு

நித்திரையில் ஒர் புதுவுலகம்
இவ்வுலகில் மனம் உலவும்
உறக்கத்தில் ஏனிந்த ஊர்வலம்...

கண் காண
மனம் சித்தரிக்கும் - கனவோ
மனம் காண
உணர்வுகள் சித்தரிக்கும்

வானத்தை தலைகுனிந்து
பார்க்க வைக்கும்

விண்மீன்களுக்கு தூண்டிலிடும்

நிலவை
உள்ளங்கையில் சிறைபடுத்தும்

அவ்வுள்ளங்கைதனை
சிட்டெறும்பும் விழுங்கவைக்கும்

கண்ணுக்குள்
காதலியை உறங்கவைக்கும்
இமையை
விசிறியாக்கி விசிறவைக்கும்
கண்ணீரால்
உறக்கம் கலையுமென்று
அணையொன்று
கட்டிவைத்து அதைத்தடுக்கும்

இதனை
விலைகொடுத்து வாங்கமுடியாது
விரைவில் கூட
காணமுடியது

நினைவுத்தாய்
பெற்றெடுத்த இக்குழந்தை
மனத்தரையில் தவழ்வதேனோ...