சனி, 30 செப்டம்பர், 2023


ரகசியம் பேசும் குழந்தைகளை
ரகசியமாக நின்று கவனிக்கும் போது
நானும் குழந்தை ஆவதும் ரகசியம்...


வெள்ளி, 29 செப்டம்பர், 2023


வெற்றியை இதயத்தில் வை
தோல்வியை தலையில் வை
இரண்டிற்கும் அப்பாற்பட்டது வாழ்க்கை
நினைவில் வை...


வியாழன், 28 செப்டம்பர், 2023


காலமும் நேரமும்
வானில் வட்டமிட்டுக் காத்திருக்கும் பருந்துகள்
இரையாகும் தருணம் எப்போதும் உண்டு...


புதன், 27 செப்டம்பர், 2023


இடது கையிற்கு
வலது கை ஆறுதல் சொல்லும் போது
தனிமை எழுந்து சென்றது...

தனிமையை தனிமையில்
விட்டுவிட விருப்பம் இல்லை
விடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்...

அது திரும்பி வந்தது
வலது கையை முத்தமிட்டுத்
தழுவிக் கொண்டது...

இடது கை இப்போது
தனிமையையும் சேர்த்து
வலது கையை அணைத்துக் கொண்டது...


செவ்வாய், 26 செப்டம்பர், 2023


நான் நானாக இருப்பதும்
நீ நீயாக இருப்பதும்தான்
பேரின்பம்...


திங்கள், 25 செப்டம்பர், 2023

சனி, 23 செப்டம்பர், 2023


தந்தையை மறுக்காதவன்
தந்தை தவிர வேறில்லை
ஒன்று போல ஒரு மரமும் இல்லை...


வெள்ளி, 22 செப்டம்பர், 2023


தனித்து நிற்கும் போது
கடலலை மெதுவாகத் தொடுகிறது
இதயம் உந்தன் கரங்களை உணர்கிறது...


வியாழன், 21 செப்டம்பர், 2023

புதன், 20 செப்டம்பர், 2023


மண்ணில் விழுந்தாலும்
சுவைக்கக் கற்றுத் தந்தது
நாவல் பழம்


செவ்வாய், 19 செப்டம்பர், 2023


ஒரு பிரச்சனையும் இல்லை
என்பதும் கூட
ஒரு பிரச்சனை தான்...


திங்கள், 18 செப்டம்பர், 2023


ஒருவர் என்று நினைக்கும்
ஒவ்வொருவரிலும் உண்டு
இன்னொருவர்...


சனி, 16 செப்டம்பர், 2023


வாழ்க்கையைப் படிக்காமல் இருப்பதற்கு
பள்ளிக்கூடங்கள் பாடம் எடுக்கின்றன
தனியார் பள்ளிகள் தரமாக
அரசுப் பள்ளிகள் தாமதமாக...


வெள்ளி, 15 செப்டம்பர், 2023


ஒவ்வொருவர் கதையிலும்
நானும் ஒரு கதாபாத்திரம்
என்னுடைய கதையிலும்
ஒவ்வொருவரும் கதாபாத்திரம்...


வியாழன், 14 செப்டம்பர், 2023


இறந்தால் பிறக்கும் எதிர்காலம்
இல்லையென்றால் வெறும் இறந்தகாலம்
கனவு அதுவே நிகழ்காலம்
கற்பனைக்கு மட்டுமே முக்காலமும்

புதன், 13 செப்டம்பர், 2023


நீர் இல்லாது தாகமும்
நீ இல்லாது மோகமும்
கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும்...


செவ்வாய், 12 செப்டம்பர், 2023


புறத்திற்கும்
மறு புறத்திற்கும் இடையில்
அகம் என்னும் கதவு நான்...

உள்ளே வெளியே விளையாட்டு
பெரும் சூதாட்டம்
வெறும் போராட்டம்...


திங்கள், 11 செப்டம்பர், 2023


கடல் தொட்டியில்
நனைந்து விளையாடும்
திமிங்கிலமும் குழந்தை...

நீர் தொடு
கவலை விடு
ஆனந்தம் இந்த உலக வீடு...


ஞாயிறு, 10 செப்டம்பர், 2023


சொல்லிச் செல்வதில்லை
மேகம்
தூர நின்று அழும்...


சனி, 9 செப்டம்பர், 2023


விருந்தாகும் முன்
வீணாகும் முன்
விரும்பி வாழ்வோம்... 

வெள்ளி, 8 செப்டம்பர், 2023


சாத்தான் சாகசக்காரன்
ஒரு வினாடி போதும்
அவன் வென்று விட...

கடவுளுக்கு தான்
வாழ்க்கை முழுவதும் வேண்டும்
அப்போதும் அவன் தோற்றே போகிறான்... 

வியாழன், 7 செப்டம்பர், 2023


காப்பர் கலரில்
புது இலைகள்
கிளையின் நினைவுகள்...

வானவில் போல
இலைவில்
வாழ்வில்
எத்தனை வண்ணங்கள்...

தெருவில்
பல உருவில்
எண்ணிலா நிறங்கள்...


ஞாயிறு, 3 செப்டம்பர், 2023


நிஜமும் பொய்
நிழலும் பொய்
தாங்கி நிற்பதே மெய்...


சனி, 2 செப்டம்பர், 2023


கோபத்தில்
உணவைத் தூக்கி எறிந்தாலென்ன
கத்தியைக் குத்திச் செருகினாலென்ன...

எல்லாம் ஒரு நொடி
அதை ஏற்று
எப்போதும் சிரி...


வெள்ளி, 1 செப்டம்பர், 2023


வெறும் கை
வெறும் வயிறு
வெறும் வார்த்தைகளில் சொல்லிட முடியாதது...