வியாழன், 26 நவம்பர், 2015

தூங்காவனம்

ஒவ்வொரு மனித வாழ்வின் இறுதியும் நரகமோ...
துயில்இலா இரவுகளின் நீட்சி அதற்கான சாட்சி...

அர்தமற்ற வாழ்க்கை
அதன் மூலதனம்

சிறுபிள்ளை விளையாட்டு
இளைஞரின் தன்னலமின்மை
பேரிளைஞனின் துணிவு
காதலியின் கனிவு
நண்பர்களின் நம்பகம்
அன்னையரின் அன்பு
தந்தைகளின் கடமை
வயோதிகரின் பொறுப்பு
முழுதிலும் மாற்றம்
முற்றிலும் ஏமாற்றம்...

விலைமதிப்பில்லா அனைத்துமே
விலைக்கு போன பின்னர்
வெறும் விலையின் பின்னே
அலையும் கூட்டம்...

கூட்டத்தில் கலந்தேயிரு
இல்லையேல் - தூங்காவனத்தில்
தொலைந்துபோவாய்...




திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பிணைப்பு

கிறுக்கல்கள் சில
ஓவியமாகவும்
ஓவியங்கள் சில
கிறுக்கலாகவும்

உண்மைகள் சில
பொய்மையாகவும்
பொய்மைகள் சில
உண்மையாகவும்

இயற்கையின் இயல்பிது
இறைவனின் படைப்பிது
யாவுமே தனித்துவம்
பிணைப்புதான் மகத்துவம்.

இளமை

இளமை

புல்லின் நுனியில்
பனித்துளி இளமை

மழை நீரில்
குமிழ்கள் இளமை

கார்காலம் தனில்
வானவில் இளமை

காற்றினில் பறக்கும்
சிற்றிறகு இளமை

செவியை கடந்திடும்
மெல்லிசை இளமை

கடலலை கால்தொட்ட
அனுபவம் இளமை

காதோடு பேசிய
கவிதைகள் இளமை

முதல் முத்தச்
சுவை இளமை

பூமனம் களவாடும்
மென்காற்று இளமை


ஐனனம்

என்னோடு சேர்ந்து ஆயிரமாயிரம் பேர்
செய்தோமே சிறையெதிர்த்து போர்
எல்லோரும் விடுதலை
நான் மட்டும் படுகொலை
கல்லறையாய் கருவறை
உயிர்த்தெழுந்தேன் மறுமுறை
சிறைவாசம் தந்தவரே
இன்று எனைநேசம் செய்கின்றார்.